‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டி: ஸ்டேட் வங்கி அணி வெற்றி

சென்னை ஆக்கி சங்கம் சார்பில் நடைபெற்ற ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டியில், ஸ்டேட் வங்கி அணி வெற்றிபெற்றது.
* பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணி கூறுகையில், ‘விளையாடுவதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பான இடம் என்று நாங்கள் நிரூபித்து இருக்கிறோம். இதன் பிறகும் எந்த அணியாவது பாகிஸ்தான் வர மறுத்தால், இது பாதுகாப்பற்ற இடம் என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். இப்போது பாகிஸ்தானை விட இந்தியாவில் தான் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது’ என்று கூறியுள்ளார்.
* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் டோனி 2004-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் அறிமுகம் ஆனார். அவர் சர்வதேச போட்டிக்குள் நுழைந்து நேற்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது. சாம்பியன்ஸ் கோப்பை, 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலக கோப்பையை வென்றுத் தந்த இந்திய கேப்டன் என்ற சிறப்புக்குரியவர். 350 ஒரு நாள் போட்டி, 90 டெஸ்ட், 98 இருபது ஓவர் போட்டிகளில் ஆடியுள்ள டோனி, கடந்த 5 மாதங்களாக ஒதுங்கி இருக்கிறார். தனது எதிர்கால திட்டம் குறித்து அடுத்த மாதத்தில் தெரிவிப்பேன் என்று 38 வயதான டோனி கூறியுள்ளார்.
* சென்னை ஆக்கி சங்கம் சார்பில் ‘ஏ’ டிவிசன் லீக் ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஸ்டேட் வங்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் செயின்ட் பால்ஸ் மனமகிழ் கிளப்பை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அணி 5-0 என்ற கோல் கணக்கில் லிங்கராஜ் நினைவு அணியை பந்தாடியது. இதே போல் அசோக் லேலண்ட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஹோம்லி கிளப்பை வென்றது.
Related Tags :
Next Story