மாநில நீச்சல் போட்டியில் ஜாசுவா, பிரமிதி சாதனை


மாநில நீச்சல் போட்டியில் ஜாசுவா, பிரமிதி சாதனை
x
தினத்தந்தி 27 Dec 2019 11:31 PM GMT (Updated: 27 Dec 2019 11:31 PM GMT)

மாநில நீச்சல் போட்டியில் ஜாசுவா, பிரமிதி ஆகியோர் சாதனை படைத்தனர்.

சென்னை,

32-வது மாநில நீச்சல் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி. நீச்சல் குளத்தில் நேற்று தொடங்கியது. இதில் குரூப்2 சிறுவர்களுக்கான 200 மீட்டர் பிரஸ்ட்டிரோக் பிரிவில் நெல்லை பாலகிருஷ்ணா பள்ளி வீரர் ஜாசுவா தாமஸ் 2 நிமிடம் 34.65 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். முன்னதாக டி.எஸ்.பி.ஏ. வீரர் தனுஷ் 2 நிமிடம் 37.42 வினாடிகளில் எட்டியதே சாதனையாக இருந்தது.

பெண்கள் குரூப்4 சிறுமியருக்கான 50 மீட்டர் பேக் ஸ்டிரோக் பந்தயத்தில் எஸ்.டி.ஏ.டி. ஏ.எஸ்.பி. வீராங்கனை பிரமிதி ஞானசேகரன் 36.99 வினாடிகளில் பந்தய தூரத்தை நீந்தி போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை ருசித்தார். இதே போல் 100 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவிலும் பிரமிதி முதலிடத்தை பிடித்தார்.


Next Story