மாநில ஜிம்னாஸ்டிக்: சேலம் வீராங்கனை நேகா முதலிடம்


மாநில ஜிம்னாஸ்டிக்: சேலம் வீராங்கனை நேகா முதலிடம்
x
தினத்தந்தி 13 Jan 2020 11:25 PM GMT (Updated: 2020-01-14T04:55:45+05:30)

மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில், சேலம் வீராங்கனை நேகா முதலிடம் பிடித்தார்.

சென்னை,

மாநில ஜிம்னாஸ்டிக் (டிரம்போலின்) போட்டி நெல்லையில் நடந்தது. இதில் பெண்களுக்கான சீனியர் பிரிவில் சேலம் வீராங்கனை நேகா 39.10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். ஜூனியர் பிரிவில் மதுரை வீராங்கனை பிரிய தர்ஷினியும், 10 வயது பிரிவில் சேலம் வீராங்கனை சஞ்சனாவும், 9 வயது பிரிவில் காஞ்சீபுரம் வீராங்கனை இலக்கியாவும் முதலிடத்தை பிடித்தனர். ஆண்களுக்கான சீனியர் பிரிவில் நெல்லை வீரர் நவீன் நாராயணனும், ஜூனியர் பிரிவில் நெல்லை வீரர் தீனதயாளும், 14 வயது பிரிவில் சேலம் வீரர் நிரஞ்சனும், 12 வயது பிரிவில் நெல்லை வீரர் சுதர்சனும், 11 வயது பிரிவில் சேலம் வீரர் சர்வேஷ்சும், 10 வயது பிரிவில் காஞ்சீபுரம் வீரர் ஸ்ரீவர்ஷனும் முதலிடத்தை கைப்பற்றினார்கள்.

Next Story