தெற்கு ரெயில்வே விளையாட்டு: தலைமை அலுவலக அணி ‘சாம்பியன்’


தெற்கு ரெயில்வே விளையாட்டு: தலைமை அலுவலக அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 13 Jan 2020 11:37 PM GMT (Updated: 13 Jan 2020 11:37 PM GMT)

தெற்கு ரெயில்வே விளையாட்டு போட்டியில், தலைமை அலுவலக அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.

சென்னை,

தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட கோட்டங்களுக்கான 8-வது விளையாட்டு போட்டிகள் சென்னையில் நடந்தது. டென்னிஸ், கைப்பந்து, பேட்மிண்டன் ஆகியவை அடங்கிய இந்த போட்டியை தெற்கு ரெயில்வே பெண்கள் நல வாரிய தலைவர் பீனா தாமஸ் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் தெற்கு ரெயில்வேயை சேர்ந்த 6 கோட்ட அணிகள் மற்றும் 2 தலைமை அலுவலக அணிகள் என 8 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் தெற்கு ரெயில்வே தலைமை அலுவலக முதல் அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீரங்கனைகள் மற்றும் அணிகளுக்கு தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஜான்தாமஸ் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினார். இந்த போட்டியில் தெற்கு ரெயில்வேயை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.


Next Story