கேலோ இந்தியா கூடைப்பந்து: தமிழக பெண்கள் அணி தங்கம் வென்றது


கேலோ இந்தியா கூடைப்பந்து: தமிழக பெண்கள் அணி தங்கம் வென்றது
x
தினத்தந்தி 20 Jan 2020 11:29 PM GMT (Updated: 20 Jan 2020 11:29 PM GMT)

கேலோ இந்தியா கூடைப்பந்து போட்டியில், தமிழக பெண்கள் அணி தங்கம் வென்றது.

கவுகாத்தி,

3-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கூடைப்பந்து இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக அரங்கேறிய இந்த போட்டியில் தமிழக அணி 59-57 என்ற புள்ளி கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

Next Story