பிற விளையாட்டு

சென்னை ஓபன் செஸ்: 2 வீரர்கள் முன்னிலை + "||" + Chennai Open Chess: 2 players leading

சென்னை ஓபன் செஸ்: 2 வீரர்கள் முன்னிலை

சென்னை ஓபன் செஸ்: 2 வீரர்கள் முன்னிலை
சென்னை ஓபன் செஸ் போட்டியில், 2 வீரர்கள் முன்னிலை பெற்றுள்ளனர்.
சென்னை,

டாக்டர் என்.மகாலிங்கம் கோப்பைக்கான 12-வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட்மாஸ்டர் செஸ் தொடர் சோழிங்கநல்லூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. இதில் 9-வது சுற்று போட்டி நேற்று நடந்தது. முந்தைய நாள் முன்னணியில் இருந்த போக்டானோவிச் ஸ்டானிஸ்லாவ் (உக்ரைன்), ரஷியாவின் பொங்ராடோவ் பவெலிடம் தோல்வியை தழுவினார். இந்தியாவின் ஹர்ஷவர்தன், உக்ரைனின் நெவிரோவ் வலெரிக்கு எதிரான ஆட்டத்தில் டிரா கண்டார். இதன் மூலம் ஹர்ஷவர்தன், சர்வதேச மாஸ்டர் அந்தஸ்தை எட்டினார். மற்றொரு இந்திய வீரர் வெங்கடேஷ், ரஷியாவின் கோகனோவ் அலெக்சியுடன் டிரா செய்தார். 9-வது சுற்று முடிவில் ரஷிய கிராண்ட்மாஸ்டர்கள் பொங்ராடோவ் பவெல், ரோஜூம் இவான் ஆகியோர் தலா 7.5 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார்கள். இந்தியாவின் வெங்கடேஷ், விஷ்ணு பிரசன்னா, முத்தையா உள்பட 12 பேர் தலா 7 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர். 10-வது மற்றும் கடைசி சுற்று இன்று நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி சட்டசபை தேர்தல்; ஆம் ஆத்மி-32, பா.ஜ.க.-16 முன்னிலை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2. டெல்லி சட்டசபை தேர்தல்; 9 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 52 இடங்களில் முன்னிலை
டெல்லி சட்டசபை தேர்தலில் 9 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 52 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
3. சென்னை ஓபன் செஸ்: ரஷிய வீரர் சாம்பியன்
சென்னை ஓபன் செஸ் தொடரில், ரஷிய வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
4. சென்னை ஓபன் செஸ்: விசாக், விஷ்ணு முன்னிலை
சென்னை ஓபன் செஸ் போட்டியில், விசாக், விஷ்ணு ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.
5. கர்நாடக இடைத்தேர்தல் முடிவுகள்: 3 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி; 9 தொகுதிகளில் முன்னிலை
கர்நாடக இடைத்தேர்தலில் 3 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 9 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.