தேசிய ஜூனியர் கைப்பந்து: தமிழக அணிகள் பதக்கம் வென்றது


தேசிய ஜூனியர் கைப்பந்து: தமிழக அணிகள் பதக்கம் வென்றது
x
தினத்தந்தி 1 Feb 2020 11:44 PM GMT (Updated: 1 Feb 2020 11:44 PM GMT)

தேசிய ஜூனியர் கைப்பந்து போட்டியில், தமிழக அணிகள் பதக்கம் வென்றது.

சென்னை,

46-வது தேசிய ஜூனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திராவில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழக அணி 20-25, 25-19, 25+18, 20-25, 13-15 என்ற செட் கணக்கில் உத்தரபிரதேச அணியிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தது. பெண்கள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் தமிழக அணி, கர்நாடகாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 21-25, 25-15, 25-20, 25-23 என்ற செட் கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது. பதக்கம் வென்ற தமிழக அணிகளுக்கு, தமிழ்நாடு கைப்பந்து சங்கம் சார்பில் சென்னையில் நேற்று பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. விழாவில் தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மன் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், துணைத்தலைவர் குணசீலன், இணை செயலாளர்கள் மகேந்திரன், பழனியப்பன், ஸ்ரீகேசவன், அசோசியேட் செயலாளர் ஜெகதீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story