கேன்ஸ் ஓபன் செஸ்: சென்னை மாணவர் குகேஷ் முதலிடம்


கேன்ஸ் ஓபன் செஸ்: சென்னை மாணவர் குகேஷ் முதலிடம்
x
தினத்தந்தி 26 Feb 2020 5:30 AM IST (Updated: 26 Feb 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

கேன்ஸ் ஓபன் செஸ் போட்டியில் சென்னை மாணவர் குகேஷ் முதலிடம் பிடித்தார்.

சென்னை,

கேன்ஸ் ஓபன் செஸ் போட்டி பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடந்தது. இதில் கடைசி சுற்று ஆட்டத்தில், 13 வயதான இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ், பிரான்ஸ் வீரர் ஹருடியுனை சந்தித்தார். 

விறு விறுப்பான இந்த ஆட்டத்தில் குகேஷ் 50-வது காய்நகர்த்தலில் ஹருடியுனை வீழ்த்தினார். மொத்தம் 7.5 புள்ளிகள் குவித்த குகேஷ் முதலிடத்தை பிடித்தார். சென்னை மேலஅயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவரான குகேஷ் கடந்த வாரம் டென்மார்க்கில் நடந்த ஓபன் செஸ் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்று இருந்தார்.
1 More update

Next Story