பெண்கள் இந்திய அணி ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஒரு உற்சாகமான தருணத்தில் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் - துளிகள்
பெண்கள் இந்திய அணி ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஒரு உற்சாகமான தருணத்தில் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
* பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஒரு உற்சாகமான தருணத்தில் ஆஸ்திரேலிய பெண் பாதுகாப்பு ஊழியருடன் இணைந்து நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது. அவரது பிரமாதமான டான்சுக்கு பாராட்டுகளும் குவிகிறது.
* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு ரசிகராக, டோனி 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதை பார்க்க விரும்புகிறேன். ஆனால் கிரிக்கெட் வீரர் என்ற முறையில் அவரை சேர்ப்பது என்பது அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்தது. அவர் ஓராண்டாக விளையாடவில்லை. எனவே அணித் தேர்வுக்கு முன்பாக அவர் நிறைய போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும்’ என்றார்.
* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குரிய இரண்டு உள்ளூர் ஆட்டங்கள் (ஏப்ரல் 5 மற்றும் ஏப்.9) அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
* டெல்லியில் அடுத்த மாதம் (மார்ச்.15 முதல் 26-ந்தேதி வரை) நடக்கும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கள் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்க ஆர்வமுடன் இருப்பதாகவும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்கனவே சில நாடுகள் விலகியுள்ள நிலையில் தங்கள் அணி வீரர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்பதை தெளிவுப்படுத்தும்படியும் தென் கொரியா துப்பாக்கி சுடுதல் சம்மேளனம், இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
* ஐ.சி.சி. நேற்று வெளியிட்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 2-வது இடத்திலும், விராட் கோலி 10-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடத்தில் தொடருகிறார். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் 6 இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அவருக்கு இந்த ஏற்றம் கிடைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் முதலிடம் வகிக்கிறார்.

Related Tags :
Next Story