ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து தோல்வி


ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: இந்திய வீராங்கனை சிந்து தோல்வி
x
தினத்தந்தி 14 March 2020 12:29 AM GMT (Updated: 14 March 2020 12:29 AM GMT)

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.

பர்மிங்காம்,

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-12, 15-21, 13-21 என்ற செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியனான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் போராடி வீழ்ந்தார். இந்த ஆட்டம் 68 நிமிடங்கள் நீடித்தது. இதன் மூலம் இந்த போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.

Next Story