‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெற்றி


‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெற்றி
x
தினத்தந்தி 14 March 2020 11:53 PM GMT (Updated: 2020-03-15T05:23:44+05:30)

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெற்றிபெற்றது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையம், ஆச்சி மசாலா நிறுவனம் ஆகியவை ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-ஐ.சி.எப். அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 5 செட்கள் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 17-25, 29-27, 25-23, 13-25, 15-12 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப். அணியை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 25-14, 25-20, 25-17 என்ற நேர்செட்டில் தமிழ்நாடு போலீசை தோற்கடித்தது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் தமிழ்நாடு போலீஸ்-ஐ.சி.எப். (மாலை 4.30 மணி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-இந்தியன் வங்கி (மாலை 6 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story