பிற விளையாட்டு

மாநில பெண்கள் கூடைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’ + "||" + State Women's Basketball: SRM Team champion

மாநில பெண்கள் கூடைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’

மாநில பெண்கள் கூடைப்பந்து: எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’
மாநில பெண்கள் கூடைப்பந்து போட்டியில், எஸ்.ஆர்.எம். அணி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.
சென்னை,

திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி சார்பில் மாநில அளவிலான பெண்கள் கூடைப்பந்து போட்டி அந்த கல்லூரி மைதானத்தில் 3 நாட்கள் நடந்தது. இதில் 8 அணிகள் கலந்து கொண்டன. இதன் சூப்பர் லீக் சுற்று ஆட்டங்களில் எஸ்.ஆர்.எம். அணி 73-53 என்ற புள்ளி கணக்கில் பிஷப் ஹீபர் கல்லூரியையும் (திருச்சி), 77-46 என்ற புள்ளி கணக்கில் ஜமால் முகமது கல்லூரியையும் (திருச்சி), இறுதி லீக்கில் 87-46 என்ற புள்ளி கணக்கில் எத்திராஜ் கல்லூரியையும் (சென்னை) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. எத்திராஜ் கல்லூரி அணி 2-வது இடத்தையும், ஜமால் முகமது கல்லூரி அணி 3-வது இடத்தையும் பிடித்தன.