கொரோனா ஆபத்து எதிரொலி: மொனாக்கோ பார்முலா1 கார்பந்தயம் ரத்து


கொரோனா ஆபத்து எதிரொலி: மொனாக்கோ பார்முலா1 கார்பந்தயம் ரத்து
x
தினத்தந்தி 20 March 2020 11:56 PM GMT (Updated: 20 March 2020 11:56 PM GMT)

கொரோனா ஆபத்து எதிரொலியாக, மொனாக்கோ பார்முலா1 கார்பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மான்ட்கார்லோ,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் 22 சுற்றுகளாக நடத்த திட்டமிடப்பட்டது. முதலாவது சுற்றான ஆஸ்திரேலியன் கிராண்ட்பிரி கடந்த 15-ந்தேதி மெல்போர்னில் நடக்க இருந்தது. கொரோனா அச்சத்தால் ஆஸ்திரேலியன் கிராண்ட்பிரி கைவிடப்பட்டது.

இதில் 7-வது சுற்றான மொனாக்கோ கிராண்ட்பிரி பந்தயம் மான்ட்கார்லோ ஓடுதளத்தில் மே 24-ந்தேதி நடைபெறும் வகையில் போட்டி அட்டவணையில் இடம் பெற்றிருந்தது. கொரோனா ஆபத்தால் மொனாக்கோ கிராண்ட்பிரி பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 1954-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக இங்கு பார்முலா1 கார்பந்தயம் ரத்தாகியுள்ளது.

Next Story