மகளுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்


மகளுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொடுத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்
x
தினத்தந்தி 19 April 2020 10:30 PM GMT (Updated: 19 April 2020 7:17 PM GMT)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் தனது மகளுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.


* 1996-ம் ஆண்டு இலங்கை அணி உலக கோப்பையை வென்ற போது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தவர் டேவ் வாட்மோர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் ரஞ்சி கிரிக்கெட்டில் கேரளா அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார். இப்போது 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பரோடா கிரிக்கெட் அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

* கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடக் கூடிய ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், தனது மகளுக்கு குத்துச்சண்டை கற்றுக்கொடுக்கிறார். இதை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

* ‘ சச்சின் தெண்டுல்கர் (இந்தியா), பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) இரண்டு பேரும் வெவ்வேறு விதமான வீரர்கள். இருவரையும் அவுட் செய்து மிகவும் கடினம். ஆனால் என்னை பொறுத்தவரை லாராவை விட தெண்டுல்கரை வீழ்த்துவது கொஞ்சம் கடினம் என்பதை எப்போதும் உணர்ந்திருக்கிறேன்’ என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கில்லெஸ்பி கூறியுள்ளார்.

* உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் முன்னாள் கால்பந்து பிரபலங்கள் பீலே, மரடோனா, ரொனால்டோ, ஜிடேன், டேவிட் பெக்காம் உள்ளிட்டோர் உற்சாகமாக கைதட்டும் வீடியோவை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய முன்னாள் கேப்டன் பாய்சுங் பூட்டியாவும் இணைந்துள்ளார்.

Next Story