தேசிய விளையாட்டு விருதை வென்ற ரங்கி ரெட்டி உள்பட 3 பேர் கொரோனாவால் பாதிப்பு


தேசிய விளையாட்டு விருதை வென்ற ரங்கி ரெட்டி உள்பட 3 பேர் கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 28 Aug 2020 1:06 AM GMT (Updated: 28 Aug 2020 1:06 AM GMT)

தேசிய விளையாட்டு விருதை வென்ற ரங்கி ரெட்டி உள்பட 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா நாளை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தலால் முதல் முறையாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தப்படும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) செய்து வருகிறது. விருது பெறுபவர்கள் பல்வேறு மாநிலங்களில் உள்ள ‘சாய்’ மையங்கள் வாயிலாக விருது விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள்.

ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் இந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொள்கிறார். இந்த நிலையில் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவு வீரர் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு இருக்கிறார்.

இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பவர்களில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் விருது விழாவில் பங்கேற்கமாட்டார்கள் என்றும் ‘சாய்’ தெரிவித்துள்ளது. மற்ற இருவரின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 74 பேரில் 65 நபர்கள் விருது விழாவில் பங்கேற்க இருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story