பிற விளையாட்டு

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு சிந்து தகுதி + "||" + Thailand Open Badminton: Sindhu qualifies for the quarterfinals

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு சிந்து தகுதி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதிக்கு சிந்து தகுதி
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து கால்இறுதிக்கு முன்னேறினார்.
பாங்காக்,

தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-10, 21-12 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் கிசோனா செல்வதுரையை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். சிந்து அடுத்து முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்திக்கிறார். 

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-12, 21-9 என்ற நேர் செட்டில் ரஸ்மஸ் ஜெம்கேவை (டென்மார்க்) வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். மற்றொரு இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 17-21, 18-21 என்ற நேர் செட்டில் மலேசியாவின் லீவ் டாரனிடம் வீழ்ந்தார். கலப்பு இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-அஸ்வினி, ஆண்கள் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஆகிய இந்திய ஜோடிகளும் தங்களது 2-வது சுற்றில் வெற்றி கண்டு கால்இறுதியை உறுதி செய்தன.

தொடர்புடைய செய்திகள்

1. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றனர்.
2. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடிகள் ஏமாற்றம்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஜோடிகள் தோல்வியை தழுவின.
3. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: சிந்து, சமீர் வர்மா வெளியேற்றம்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கணை பி.வி.சிந்து முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனிடம் தோல்வியடைந்தார்.
4. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா, ஆக்சல்சென் ‘சாம்பியன்’
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் ஆகியோர் ‘சாம்பியன்’ பட்டம் வென்றனர்.
5. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா மரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.