தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடிகள் ஏமாற்றம்


தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 23 Jan 2021 11:40 PM GMT (Updated: 23 Jan 2021 11:40 PM GMT)

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் ஜோடிகள் தோல்வியை தழுவின.

பாங்காக்,

டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையரில் நேற்று நடந்த அரைஇறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி 18-21, 18-21 என்ற நேர் செட்டில் ஆரோன் சியா- சோ வூய் யிக் (மலேசியா) இணையிடம் தோற்று நடையை கட்டியது. இதே போல் கலப்பு இரட்டையரிலும் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன் அரைஇறுதியில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 20-22, 21-18, 12-21 என்ற செட் கணக்கில் போராடி தாய்லாந்தின் டேச்சாபோல்-சப்சிரீ இணையிடம் வீழ்ந்தது.

பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-19, 21-15 என்ற நேர் செட்டில் அன் சி யங்கை (தென்கொரியா) விரட்டியடித்து இறுதிசுற்றுக்கு முன்னேறினார். இன்று நடக்கும் மகுடத்துக்கான ஆட்டத்தில் கரோலினா மரின், ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) எதிர்கொள்கிறார்.

Next Story