ஆசிய குத்துச்சண்டை: இறுதிப்போட்டியில் ஷிவ தபா


ஆசிய குத்துச்சண்டை: இறுதிப்போட்டியில் ஷிவ தபா
x
தினத்தந்தி 29 May 2021 10:51 PM GMT (Updated: 29 May 2021 10:51 PM GMT)

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 64 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் ஷிவ தபா 4-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் பகோதுர் உஸ்மோனோவை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

துபாய்,

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 64 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் ஷிவ தபா 4-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் பகோதுர் உஸ்மோனோவை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதேபோல் 91 கிலோ பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் சஞ்சீத் 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் துர்சுனோவ் சான்ஜரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 60 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் வரிந்தர் சிங் 2-3 என்ற கணக்கில் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். 69 கிலோ பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், உஸ்பெகிஸ்தானின் பாதுரோவ் பாபா உஸ்மானை சந்தித்தார். இதில் முதல் ரவுண்டில் கண் அருகில் காயம் அடைந்த விகாஸ் கிருஷ்ணன் பாதியில் விலக நேரிட்டது. இதனால் பாதுரோவ் வெற்றி பெற்று இறுதிப்போட்டியை எட்டினார். விகாஸ் கிருஷ்ணன் வெண்கலப்பதக்கம் பெற்றார்.

பெண்கள் பிரிவில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனைகள் மேரிகோம் (51 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), அனுபமா (81 கிலோவுக்கு மேல்), லால்பாட் சாய்ஷி (64 கிலோ) ஆகியோர் களம் காண்கிறார்கள். நாளை ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டி நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் நடப்பு சாம்பியன் அமித் பன்ஹால் (52 கிலோ), ஷிவ தபா (64 கிலோ), சஞ்சீத் (91 கிலோ) ஆகியோர் தங்களது எதிராளியை சந்திக்க உள்ளனர்.

Next Story