ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : 75 கிலோ எடை பிரிவில் பூஜா ரானி தங்கம் வென்றார்


ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : 75 கிலோ எடை பிரிவில் பூஜா ரானி தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 30 May 2021 10:53 PM IST (Updated: 30 May 2021 10:53 PM IST)
t-max-icont-min-icon

துபாயில், ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது.

துபாய்,

ஆசிய குத்துச்சண்டை போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 75 கிலோ எடை பிரிவு மகளிர்  இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பூஜா ரானியும் உஸ்பெஸ்கிதானின் மவ்லுடா மோவ்லோனோவாவும் மோதினர். 

இதில், இந்தியாவின் பூஜா ரானி  வெற்றி பெற்று தங்கம் வென்றார். முன்னதாக 51 கிலோ எடைப்பிரிவு ஆட்டத்தில் இந்தியாவின் மேரி கோம் வெள்ளி பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. 
1 More update

Next Story