இந்திய வீராங்கனை ராஹி சர்னோபாத் தங்கம் வென்றார்


இந்திய வீராங்கனை ராஹி சர்னோபாத் தங்கம் வென்றார்
x
தினத்தந்தி 29 Jun 2021 1:23 AM GMT (Updated: 2021-06-29T06:53:46+05:30)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ராஹி சர்னோபாத் தங்கம் வென்றார்.

ஒசிஜெக், 

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி குரோஷியாவில் உள்ள ஒசிஜெக் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தில் இறுதி சுற்றில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய வீராங்கனையான மராட்டியத்தை சேர்ந்த 30 வயது ராஹி சர்னோபாத் 39 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். பிரான்ஸ் வீராங்கனை மத்தில்டே லமோல்லே 31 புள்ளியுடன் வெள்ளிப்பதக்கமும், ரஷியாவின் விடாலினா பாட்சரஷ்கினா 28 புள்ளியுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை மானு பாகெர் 11 புள்ளிகளுடன் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த போட்டியில் இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கனவே இந்தியா ஒரு வெள்ளிப்பதக்கம், 2 வெண்கலப்பதக்கம் வென்று இருந்தது.

Next Story