பிற விளையாட்டு

உலக டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா-சத்யன் ஜோடி ‘சாம்பியன்’ + "||" + India's Manika Batra and G Sathiyan bag mixed doubles title at WTT Contender

உலக டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா-சத்யன் ஜோடி ‘சாம்பியன்’

உலக டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா-சத்யன் ஜோடி ‘சாம்பியன்’
உலக டேபிள் டென்னிஸ் போட்டி (குறைந்த தரவரிசை கொண்டவர்களுக்கானது) ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்தது. இதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிபோட்டியில் இந்தியாவின் மனிகா பத்ரா-சத்யன் ஜோடி 11-9, 9-11, 12-10, 11-6 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் டோரா மதராஸ்-நந்துர் எசேகி இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
2018-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு பிறகு முதல்முறையாக இணைந்து ஆடிய மனிகா பத்ரா, சத்யன் ஜோடி இந்த பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளது. ‘மிகச் சிறிய கால பயிற்சியில் இருவரும் கூட்டாக இந்த பட்டத்தை வென்று இருப்பது சிறப்பானதாகும். இது, ஒரு இணையாக எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை காட்டுகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் ஈடுகொடுக்கும் வகையில் சிறப்பான யுக்தியுடன் செயல்பட்டோம்’ என்று சென்னையை சேர்ந்த சத்யன் தெரிவித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 10-12, 9-11, 10-12, 8-11 என்ற செட் கணக்கில் ஐரோப்பிய யூத் சாம்பியனான எலிசபெத் அப்ராமியானிடம் (ரஷியா) வீழ்ந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. சக வீராங்கனைக்காக விட்டுக்கொடுக்க வற்புறுத்தினார்: பயிற்சியாளர் மீது மனிகா பத்ரா பரபரப்பு புகார்
டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று வரை மணிகா பத்ரா முன்னேறியிருந்தார்.
2. உலக டேபிள் டென்னிஸ்: மனிகா பத்ரா அரைஇறுதிக்கு தகுதி
உலக டேபிள் டென்னிஸ் தொடர் (குறைந்த தரவரிசை கொண்டவர்களுக்கான போட்டி) ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடந்து வருகிறது.