ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: இந்திய வீரர் சைனி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: இந்திய வீரர் சைனி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 24 Aug 2021 5:13 AM GMT (Updated: 24 Aug 2021 5:13 AM GMT)

ஆசிய இளையோர் மற்றும் ஜூனியர் குத்துச்சண்டை போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஜூனியர் 70 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் கவுரவ் சைனி 4-1 என்ற கணக்கில் கிர்கிஸ்தான் வீரர் ஜாகிரோவ் முகாமடாஜிஸ்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதேபோல் 54 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் அஷிஸ் 5-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் ரமனோவ் ஜாபரை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்தார். 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அன்ஷூல், ஐக்கிய அரபு அமீரக வீரர் மன்சூர் காலித்தையும், 81 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீரர் பரத் ஜோன், உஸ்பெகிஸ்தானின் கென்ஸ்பாவையும் சாய்த்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர்.

Next Story