உலக இளையோர் கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அபாரம்


உலக இளையோர் கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அபாரம்
x
தினத்தந்தி 24 Aug 2021 7:27 PM GMT (Updated: 24 Aug 2021 7:27 PM GMT)

உலக இளையோர் கைப்பந்து தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தெக்ரான்,

17-வது உலக இளையோர் (19 வயதுக்குட்பட்டோர்) கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் தலைநகர் தெக்ரானில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும். இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நைஜீரியாவை சந்தித்தது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 25-17, 23-25, 25-21, 26-24 என்ற செட் கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. இந்திய அணி இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் வலுவான ஈரானை எதிர்கொள்கிறது.

Next Story