சர்வதேச டேபிள் டென்னிஸ்: சென்னை வீரர் சத்யன் ‘சாம்பியன்’


சர்வதேச டேபிள் டென்னிஸ்: சென்னை வீரர் சத்யன் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 25 Aug 2021 10:21 PM GMT (Updated: 25 Aug 2021 10:21 PM GMT)

சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் சென்னை வீரர் சத்யன் வெற்றி பெற்றுள்ளார்.

ஒலாமாக், 

செக்குடியரசு சர்வதேச ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி அங்குள்ள ஒலாமாக் நகரில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் சுவீடனின் துருல்ஸ் மோர்கார்த்தை தோற்கடித்த இந்திய வீரர் சத்யன் இறுதி ஆட்டத்தில் உக்ரைனின் யெவின் பிரைஸ்செபாவை நேற்று எதிர்கொண்டார். 

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சத்யன் 11-0, 11-6, 11-6, 14-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றியை ருசித்து பட்டத்தை தனதாக்கினார். சென்னையைச் சேர்ந்த சத்யன் ஒற்றையர் பிரிவில் வென்ற 3-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.

Next Story