65 அணிகள் பங்கேற்கும் செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து போட்டி இன்று தொடங்குகிறது

65 அணிகள் பங்கேற்கும் செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து போட்டி இன்று தொடங்குகிறது.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சாய்ராம் நிறுவனம் ஆதரவுடன் மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது.
ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 50 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் கலந்து கொள்கின்றன. மாலை 4 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் போலீஸ் ஐ.ஜி. ஆர்.தினகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் எம்.அழகேசன், செயலாளர் ஏ.மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story