பிற விளையாட்டு

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: 3 இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி + "||" + Asian Junior Boxing: 3 Indian players qualify for the final

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: 3 இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி

ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: 3 இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி
ஆசிய ஜூனியர் குத்துச்சண்டை: 3 இந்திய வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி.
துபாய்,

ஆசிய ஜூனியர் மற்றும் இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் ஜூனியர் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை விஷ்ணு ரதி, மங்கோலியாவின் ஒட்கான்பாத் யெசுன்குலெனை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே சரமாரியாக குத்துவிட்ட விஷ்ணு ரதி 2 நிமிடத்துக்குள் எதிராளியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 52 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை தானு 5-0 என்ற கணக்கில் நேபாளத்தின் சோஸ்திகாவையும், 60 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை நிகிதா சந்த் 5-0 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் முகுசா டாஹிரோவாவையும் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய குத்துச்சண்டை: இறுதிப்போட்டியில் ஷிவ தபா
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்களுக்கான 64 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் ஷிவ தபா 4-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் பகோதுர் உஸ்மோனோவை வீழ்த்தி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.