மாவட்ட கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம். ஸ்பைக்கர்ஸ் அணி ‘சாம்பியன்’


மாவட்ட கைப்பந்து போட்டி: எஸ்.ஆர்.எம். ஸ்பைக்கர்ஸ் அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 31 Aug 2021 9:22 PM GMT (Updated: 31 Aug 2021 9:22 PM GMT)

மாவட்ட கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம். ஸ்பைக்கர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை, 

செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 50 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் கலந்து கொண்டன. ஆண்கள் பிரிவில் லீக் சுற்று முடிவில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி கண்ட எஸ்.ஆர்.எம். ஸ்பைக்கர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. டி.பி.ஜெயின் அணி 2-வது இடத்தையும், எஸ்.ஆர்.எம். வள்ளியம்மை அணி 3-வது இடத்தையும் பெற்றன. பெண்கள் பிரிவில் டாக்டர் பாரிவேந்தர் அணி முதலிடத்தையும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 2-வது இடத்தையும் பிடித்தன.

பரிசளிப்பு விழாவில் சாய்ராம் நிறுவனங்களின் தலைவர் சாய்பிரகாஷ் லியோ முத்து, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் செந்தமிழ்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்கள். விழாவில் ஜோன்ஸ் பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் எம்.ஜோன்ஸ், ஸ்விஸ் கார்னியர் நிர்வாக இயக்குனர் டி.விக்னேஷ் காந்தி, செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் எம்.அழகேசன், செயலாளர் ஏ.மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story