ஆசிய கைப்பந்து போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு


ஆசிய கைப்பந்து போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 8 Sep 2021 1:27 AM GMT (Updated: 8 Sep 2021 1:27 AM GMT)

ஆசிய கைப்பந்து போட்டிக்கான இந்திய கைப்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

21-வது ஆசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் வருகிற 12-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஜப்பான், பக்ரைன், கத்தார் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். ஆசிய போட்டிக்கான இந்திய கைப்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி வீரர்கள் வருமாறு:-

கார்த்திக் அசோக் (கேப்டன், கர்நாடகா), அஷ்வல் ராய் (ரெயில்வே), பிரின்ஸ் மாலிக், ஷூபம் சவுத்ரி, விகாஸ் (மூவரும் அரியானா), அஜித் லால், முத்துசாமி, ஜெரோம் வினித், ஷோன் ஜான் (நால்வரும் கேரளா), சிராக் யாதவ் (குஜராத்), அஸ்வின் ராஜ் (தமிழ்நாடு), சாக்லைன் தாரிக் (சர்வீசஸ்), வினித் குமார் (அசாம்), கமலேஷ் காதிக் (ராஜஸ்தான்), தலைமை பயிற்சியாளர்: ஜி.இ.ஸ்ரீதரன், உதவி பயிற்சியாளர்கள்: நரேஷ்குமார், அவினிஷ் குமார் யாதவ், மானேஜர்: அனில் சவுத்ரி.

Next Story