இந்திய வில்வித்தை வீரர் அபிஷேக் வர்மாவுக்கு புதிய கவுரவம்

இந்திய வீரர் அபிஷேக் வர்மா, உலக வில்வித்தை சம்மேளனத்தின் வீரர், வீராங்கனைகள் கமிட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
உலக கோப்பை வில்வித்தை போட்டியில் ‘காம்பவுண்ட்’ பிரிவில் 3 முறை தங்கப்பதக்கம் வென்றவரான 32 வயது இந்திய வீரர் அபிஷேக் வர்மா, உலக வில்வித்தை சம்மேளனத்தின் வீரர், வீராங்கனைகள் கமிட்டியின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இதேபோல் பெண்கள் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான ரஷிய வீராங்கனை நதாலியா அவ்டீவாவும் இந்த கமிட்டியின் உறுப்பினராக தேர்வாகி இருக்கிறார். அமெரிக்காவில் நடந்து வரும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்-வீராங்கனைகள் வாக்களித்து இருவரையும் தேர்வு செய்துள்ளனர். இவர்கள் இருவரின் பதவிகாலம் 4 ஆண்டுகள் ஆகும்.
Related Tags :
Next Story