பார்முலா1 கார் பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி


பார்முலா1 கார் பந்தயம்: நெதர்லாந்து வீரர் வெர்ஸ்டப்பென் வெற்றி
x
தினத்தந்தி 25 Oct 2021 11:00 PM GMT (Updated: 25 Oct 2021 11:00 PM GMT)

பார்முலா1 கார்பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் முதலிடத்தை பிடித்து 25 புள்ளிகளை தட்டிச் சென்றார்.

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 17-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரி போட்டி அங்குள்ள ஆஸ்டினில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்தது. 

இதில் 308.405 கிலோ மீட்டர் இலக்கை நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1 மணி 34 நிமிடம் 36.552 வினாடியில் கடந்து முதலிடத்தை பிடித்து 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1.333 வினாடி பின்தங்கி 2-வது இடத்தை பிடித்தார். 42.223 வினாடிகள் பின்தங்கிய மெக்சிகோ வீரர் செர்ஜியொ பெரேஸ் (ரெட்புல் அணி) 3-வது இடத்தை தனதாக்கினார். 

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வாய்ப்பில் வெர்ஸ்டப்பென் 287.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். லீவிஸ் ஹாமில்டன் 275.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். அடுத்த சுற்று பந்தயமான மெக்சிகோ கிராண்ட்பிரி போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி நடக்கிறது.


Next Story