உலக குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்


உலக குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் முன்னேற்றம்
x
தினத்தந்தி 30 Oct 2021 4:40 AM IST (Updated: 30 Oct 2021 4:40 AM IST)
t-max-icont-min-icon

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இந்திய வீரர் ஆகாஷ் குமார் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

பெல்கிரேடு, 

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது. இதில் 54 கிலோ உடல் எடைப்பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீரர் ஆகாஷ் குமார், ஜெர்மனியின் ஓமர் சாலா இப்ராகிமை எதிர்கொள்ள இருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக இப்ராகிம் கடைசி நேரத்தில் விலகினார். இதனால் ஆகாஷ் குமார் களம் இறங்காமலேயே கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 67 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் ஆகாஷ் சங்வான் 4-1 என்ற கணக்கில் ஜெர்மனியின் டேனியல் கோட்டெரை வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார். இதே போல் ஆசிய விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் சஞ்ஜீத் (92 கிலோ), ரஷியாவின் ஆந்த்ரே ஸ்டோட்ஸ்கியை விரட்டியடித்து அடுத்த சுற்றை எட்டினார்.
1 More update

Next Story