உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் ஷிவா தபா காலிறுதிக்கு முன்னேற்றம்


உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர் ஷிவா தபா காலிறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 2 Nov 2021 1:45 PM GMT (Updated: 2 Nov 2021 1:45 PM GMT)

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் ஷிவா தபா காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

பெல்கிரேட்,

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதிக்கு முன்னேறுவதற்கான போட்டியில் இந்திய வீரர் ஷிவா தபா, பிரான்சின் லூன்ஸ் ஹம்ராவ்யை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் இந்திய வீரர் ஷிவா தபா 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் லூன்ஸ் ஹம்ராவ்யை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஏற்கெனவே நான்கு இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story