இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த், துருவ் கபிலா-சீக்கி ரெட்டி அடுத்த சுற்றுக்கு தகுதி!


இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: கிடாம்பி ஸ்ரீகாந்த், துருவ் கபிலா-சீக்கி ரெட்டி அடுத்த சுற்றுக்கு தகுதி!
x
தினத்தந்தி 17 Nov 2021 9:24 AM GMT (Updated: 17 Nov 2021 9:24 AM GMT)

இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் பிரான்ஸ் நாட்டின் கிறிஸ்டோ போப்போவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

பாலி,

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில்,  இன்று நடைபெற்ற போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் பிரான்ஸ் நாட்டின் கிறிஸ்டோ போப்போவை 21-18 15-21 21-16 எனும் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னாள் நம்பர் 1 வீரரும் தற்போது 15ம் நிலை வீரருமான ஸ்ரீகாந்த் அடுத்த சுற்று போட்டியில், உலகின் 6ம் நிலை வீரரான  இந்தோனேஷியாவின் ஜொனாதன் கிறிஸ்டியை எதிர்கொள்ள உள்ளார்.கலப்பு இரட்டையர் போட்டியில் துருவ் கபிலா மற்றும் என் சீக்கி ரெட்டி  இணை இந்தோனேஷியாவின் பிரவீன் ஜோர்டான் மற்றும் மெலாட்டி டேவா இணையை 21-11 22-20 எனும் செட் கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு போட்டியில் காமன்வெல்த் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பாருபள்ளி காஷ்யப்,  டென்மார்க்கின் ஹான்ஸ் கிறிஸ்டியனிடம் 10-21 19-21 எனும் செட் கனக்கில் தோல்வி அடைந்தார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற போட்டிகளில், பி.வி.சிந்து மற்றும் லக்‌ஷயா சென் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story