உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் தோல்வி


உலக டேபிள் டென்னிஸ்: இந்திய ஜோடிகள் தோல்வி
x
தினத்தந்தி 28 Nov 2021 9:29 PM GMT (Updated: 28 Nov 2021 9:29 PM GMT)

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் கால்இறுதியில் இந்திய ஜோடிகள் தோல்வியடைந்தன

ஹூஸ்டன்,

உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் மனிகா பத்ரா- அர்ச்சனா ஜோடி 1-11, 6-11, 8-11 என்ற நேர் செட் கணக்கில் சாரா டி நட்டே- நி ஸியா லியான் (லக்சம்பர்க்) இணையிடம் பணிந்து வெளியேறியது. 

இதே போல் கலப்பு இரட்டையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் மனிகா பத்ரா, தமிழகத்தின் ஜி.சத்யன் ஜோடி 5-11, 2-11, 11-7, 9-11 என்ற செட் கணக்கில் டொமாகஜூ ஹரிமோட்டா- ஹினா ஹயட்டா (ஜப்பான்) இணையிடம் வீழ்ந்தது. 

1926-ம் ஆண்டுக்கு பிறகு உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் எந்த இந்தியரும் பதக்கம் வென்றதில்லை. கால்இறுதி சுற்றில் இந்திய ஜோடிகள் வெற்றி பெற்றிருந்தால் குறைந்தது வெண்கலப்பதக்கம் உறுதியாகி இருக்கும். அந்த அரிய வாய்ப்பை நழுவ விட்டு விட்டனர்.

Next Story