புரோ கபடி லீக்: டெல்லி அணி ‘திரில்’ வெற்றி


புரோ கபடி லீக்: டெல்லி அணி ‘திரில்’ வெற்றி
x
தினத்தந்தி 5 Jan 2022 11:36 PM GMT (Updated: 5 Jan 2022 11:36 PM GMT)

நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தபாங் டெல்லி அணி தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது.

பெங்களூரு,

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த பரபரப்பும், திரிலிங்கும் நிறைந்த ஒரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 36-35 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. டெல்லி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த நட்சத்திர ரைடர் நவீன்குமார் 25 புள்ளிகளை குவித்து வியப்பூட்டினார். நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணியான டெல்லி 4 வெற்றி, 2 டிரா என்று 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 

மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் 33-26 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இன்றைய ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-பாட்னா பைரட்ஸ் (இரவு 7.30 மணி), பெங்களூரு புல்ஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story
  • chat