புரோ கபடி லீக்: பாட்னா பைரட்ஸ் திரில் வெற்றி


புரோ கபடி லீக்: பாட்னா பைரட்ஸ் திரில் வெற்றி
x
தினத்தந்தி 8 Jan 2022 11:57 PM GMT (Updated: 8 Jan 2022 11:57 PM GMT)

பாட்னா பைரட்ஸ் அணி 27 - 26 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

பெங்களூரு,

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 40-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி உ.பி.யோத்தா அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 37-33 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவை சாய்த்து 5-வது வெற்றியை ருசித்தது. 

மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான மும்பை அணி 48 - 38 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை தோற்கடித்தது. 7-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி கணக்கை தொடங்காத சோகம் தொடருகிறது. 

இன்னொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ் 27 - 26 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் புனேரி பால்டன் - பெங்கால் வாரியர்ஸ் (இரவு 7.30 மணி), பெங்களூரு புல்ஸ் - உ.பி.யோத்தா (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story