புரோ கபடி லீக்: மும்பை அணியை வீழ்த்தி பாட்னா பைரட்ஸ் வெற்றி

x
தினத்தந்தி 12 Jan 2022 10:57 AM IST (Updated: 12 Jan 2022 10:57 AM IST)
நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ், மும்பை அணியுடன் மோதியது.
பெங்களூரு,
12 அணிகள் இடையிலான 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்ஸ், மும்பை அணியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் அணி 43-23 என்ற புள்ளி கணக்கில் மும்பையை சாய்த்து 6-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 40-22 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வென்றது.
இன்றைய ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்-உ.பி. யோத்தா (இரவு 7.30 மணி), தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





