புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ்-மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டை


புரோ கபடி லீக்: பெங்கால் வாரியர்ஸ்-மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டை
x
தினத்தந்தி 16 Jan 2022 8:29 AM GMT (Updated: 16 Jan 2022 8:29 AM GMT)

பெங்கால் வாரியர்ஸ்-மும்பை அணிகளுக்கு இடையிலான திரில்லிங்கான ஆட்டம் டையில் (சமனில்) முடிந்தது.

பெங்களூரு,

8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 55-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் அரியான ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 28-25 என்ற புள்ளி கணக்கில் அரியான ஸ்டீலர்சை வீழ்த்தி 6-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 39-33 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை சாய்த்து 3-வது வெற்றியை பதிவு செய்தது. 

நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்ஸ்-மும்பை அணிகளுக்கு இடையிலான திரில்லிங்கான ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமனில்) முடிந்தது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 7.30 மணி), பாட்னா பைரட்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Next Story
  • chat