‘பத்மபூஷன்’ விருது ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளி சமூகத்துக்கும் உத்வேகம் அளிக்கிறது: தேவேந்திர ஜஜாரியா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 27 Jan 2022 7:55 AM IST (Updated: 27 Jan 2022 7:55 AM IST)
t-max-icont-min-icon

பத்மபூஷன் விருது பெற்ற தேவேந்திர ஜஜாரியா, இந்த விருது ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளி சமூகத்துக்கும் உத்வேகம் அளிக்கிறது என்று கூறினார்.

புதுடெல்லி,

பாராஒலிம்பிக்கில் 2 தங்கப்பதக்கம் வென்ற சாதனையாளரான ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியாவுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது. இது குறித்து அவர் கூறுகையில், 

‘இந்த விருது பாரா விளையாட்டுக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த மாற்றுத்திறனாளி சமூகத்துக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியதாகும். முதல்முறையாக பாராவிளையாட்டு வீரருக்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 நான் விளையாட்டில் மிகப்பெரிய வீரராக உருவெடுக்க வண்டும் என்பதே எனது தந்தையின் கனவு. இதற்காக அவர் நிறைய தியாகம் செய்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக இதை பார்க்க அவர் இல்லை. இந்த விருதை மறைந்த எனது தந்தக்கு அர்ப்பணிக்கிறேன்’ என்று அவர் கூறினார்.

1 More update

Next Story