புரோ கபடி லீக்: தமிழ் தலைவாசை வீழ்த்தியது பாட்னா பைரட்ஸ்..!
நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின.
பெங்களூரு,
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 80-வது லீக் ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ் அணியை சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாட்னா பைரட்ஸ் 52-24 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை எளிதில் சாய்த்து 8-வது வெற்றியை ருசித்தது. 13-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 3 வெற்றி, 4 தோல்வி, 6 டை கண்டுள்ளது.
இன்றைய ஆட்டங்களில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தபாங் டெல்லி (இரவு 7.30 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.
Related Tags :
Next Story