புரோ கபடி லீக்: குஜராத்தை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி
நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
பெங்களூரு,
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 81-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி-குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தபாங் டெல்லி அணி 41-22 என்ற புள்ளி கணக்கில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை எளிதில் தோற்கடித்தது. 14-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி புள்ளிபட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 12-வது ஆட்டத்தில் ஆடிய குஜராத் அணி சந்தித்த 6-வது தோல்வி இதுவாகும்.
இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 7.30 மணி), தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.
Related Tags :
Next Story