ஒடிசா ஓபன் பேட்மிண்டன்: இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்று உன்னதி ஹூடா சாதனை


ஒடிசா ஓபன் பேட்மிண்டன்: இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்று உன்னதி ஹூடா சாதனை
x
தினத்தந்தி 31 Jan 2022 12:26 AM GMT (Updated: 2022-01-31T05:56:20+05:30)

ஒடிசா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இளம் வயதில் சாம்பியன் பட்டம் வென்று உன்னதி ஹூடா சாதனை படைத்துள்ளார்.

கட்டாக், 

ஒடிசா ஓபன் ‘சூப்பர் 100’ சர்வதேச பேட்மிண்டன் போட்டி கட்டாக்கில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 21-18, 21-11 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான சுமித் தோஷ்னிவாலை வெறும் 35 நிமிடங்களில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 

அவருக்கு ரூ.4¼ லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது. இதன் மூலம் இந்த வகை பேட்மிண்டனில் குறைந்த வயதில் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை 14 வயதான அரியானாவைச் சேர்ந்த உன்னதி ஹூடா பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கிரண் ஜார்ஜ் 21-15, 14-21, 21-18 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரான பிரியன்ஷூ ரஜவாத்தை போராடி வீழ்த்தி பட்டத்தை தட்டிச் சென்றார். பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரீஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-12, 21-10 என்ற நேர் செட்டில் சக நாட்டு இணையான சன்யோகிதா-ஸ்ருதி மிஷ்ராவை வீழ்த்தி கோப்பையை வசப்படுத்தியது.

Next Story