'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: தமிழ்நாடு போலீஸ் அணி முதல் வெற்றி


ஏ டிவிசன் லீக் கைப்பந்து: தமிழ்நாடு போலீஸ் அணி முதல் வெற்றி
x

கோப்புப்படம் 

‘ஏ’ டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ. குழுமம் ஆதரவுடன் 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 10-வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு போலீஸ் அணி 25-23, 21-25, 28-26, 25-17 என்ற செட் கணக்கில் டி.ஜி.வைஷ்ணவா அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.

மற்றொரு ஆட்டத்தில் வருமான வரி அணி 26-24, 25-21, 25-27, 21-25, 15-9 என்ற செட் கணக்கில் சுங்க இலாகாவை போராடி வீழ்த்தியது. 5-வது ஆட்டத்தில் ஆடிய வருமான வரி அணி பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். சுங்க இலாகா அணிக்கு 5-வது தோல்வியாகும்.


Next Story