ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் கரோலினா மரின் 'சாம்பியன்'


ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் கரோலினா மரின் சாம்பியன்
x

கோப்புப்படம் 

நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின், ஜப்பானின் அகானே யமாகுச்சியை சந்தித்தார்.

பர்மிங்காம்,

நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின் (ஸ்பெயின்), 2 முறை உலக சாம்பியனான ஜப்பானின் அகானே யமாகுச்சியை சந்தித்தார்.

இதில் மரின் 26-24, 11-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது காயத்தால் யமாகுச்சி விலகினார். இதனால் மரின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பையை தட்டிச் சென்றார். இந்த பட்டத்தை மரின் ருசிப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2015-ம் ஆண்டிலும் இங்கு மகுடம் சூடியிருந்தார்.

இதன் ஆண்கள் பிரிவில் இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி 21-15, 21-14 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் அந்தோனி சினிசுகாவை சாய்த்து பட்டத்தை கைப்பற்றினார். இந்த போட்டியில் இந்திய தரப்பில் 14 வீரர், வீராங்கனைகள் களம் கண்டனர். இவர்களில் சிறந்த செயல்பாடாக லக்ஷயா சென் அரைஇறுதி வரை முன்னேறி இருந்தார்.


Next Story