அகில இந்திய பல்கலைக்கழக செஸ்: எஸ்.ஆர்.எம். அணி 'சாம்பியன்'


அகில இந்திய பல்கலைக்கழக செஸ்: எஸ்.ஆர்.எம். அணி சாம்பியன்
x

அகில இந்திய பல்கலைக்கழக செஸ் போட்டி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அமெத் பல்கலைக்கழகத்தில் நடந்தது.

சென்னை,

அகில இந்திய பல்கலைக்கழக செஸ் போட்டி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அமெத் பல்கலைக்கழகத்தில் நடந்தது. இதில் 4 மண்டலங்களை சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டன. 5 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் அனைத்து சுற்றிலும் வெற்றிகளை குவித்த சென்னையை சேர்ந்த எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 15 புள்ளிகளுடன் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகம் (மராட்டியம்) 2-வது இடத்தையும், ராஷ்டிரசந்த் துகாடோஜி மகராஜ் பல்கலைக்கழகம் (நாக்பூர்) 3-வது இடத்தையும், கொல்கத்தா பல்கலைக்கழகம் 4-வது இடத்தையும் பெற்றன.

பரிசளிப்பு விழாவில் அமெத் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜே.ராமச்சந்திரன், அறங்காவலர் சுசீலா, இணைவேந்தர் ராஜேஷ், துணைவேந்தர் திருவாசகம் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினர்.


Next Story