உலக இளையோர் வில்வித்தை: இந்திய வீரர் பார்த் சாலுங்கே தங்கம் வென்று சாதனை


உலக இளையோர் வில்வித்தை: இந்திய வீரர் பார்த் சாலுங்கே தங்கம் வென்று சாதனை
x

கோப்புப்படம்

உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி அயர்லாந்தில் நடந்தது.

லைமெரிக்,

உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி அயர்லாந்தில் நடந்தது. இதில் 21 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பார்த் சாலுங்கே 7-3 என்ற கணக்கில் தென்கொரியாவின் இன்சுன் சோங்கை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

இதன் மூலம் மராட்டியத்தை சேர்ந்த 19 வயதான பார்த் சாலுங்கே உலக இளையோர் வில்வித்தை போட்டியின் ரிகர்வ் தனிநபர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் பெண்கள் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை பாஜா கவுர் வெண்கலப்பதக்கம் பெற்றார்.

இந்த போட்டியில் இந்தியா 6 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலத்துடன் மொத்தம் 11 பதக்கங்கள் வென்று 2-வது இடத்தை பெற்றது. தென்கொரியா 6 தங்கம், 4 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை கைப்பற்றி முதலிடத்தை பிடித்தது.


Next Story