வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்

Image Courtesy : SAI Media Twitter
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது
லிமரிக்,
அயர்லாந்தில் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், 21 வயதிற்குட்பட்டோருக்கான காம்பவுண்டு வில்வித்தை போட்டியில், இந்தியாவின் பிரியன்ஷ், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
இவர் இறுதிச்சுற்றில் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த அல்ஜாஷ் பிரென்க் என்ற வீரரை 147-141 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.
முன்னதாக 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி காம்பவுண்டு பிரிவில் அமெரிக்காவின் லீன் டிரேக்கை 142-136 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 தங்கம் அடங்கும்.
Major Wins for Team at Youth & Cadet Archery World Championship,
— SAI Media (@Media_SAI) July 8, 2023
's Priyansh defeated 's Aljaz 147-141 to claim & become ♂️ Junior World Champion in Compound Arachery events.
Meanwhile, Aditi Gopichand Swamy, World Record Holder in U-18 category, defeated to… pic.twitter.com/G4Nw4f5CaJ






