ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்


ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடக்கம்
x

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று கஜகஸ்தானை சந்திக்கிறது.

துபாய்,

ஆசிய பேட்மிண்டன் கலப்பு அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கஜகஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று கஜகஸ்தானை சந்திக்கிறது. இந்திய அணியில் காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு இருக்கும் பி.வி.சிந்து, எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென், அகார்ஷி காஷ்யப், சிராக் ஷெட்டி-துருவ் கபிலா (ஆண்கள் இரட்டையர்), திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் (பெண்கள் இரட்டையர்) உள்ளிட்ட வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

காயம் காரணமாக சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story