ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா...!
ஆசிய விளையாட்டு தொடரில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது.
ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
Live Updates
- 6 Oct 2023 12:22 PM IST
பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்
ஆசிய விளையாட்டு போட்டி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சீனாவிடம் தோல்வி அடைந்தது. இந்தியாவின் பிரனாய் - சீனாவின் லி ஷிபெங் அரையிறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். இதில் பிரனாய் 16-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் சீன வீரரிடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்துடன் நடையை கட்டியது.
- 6 Oct 2023 12:01 PM IST
ஆசிய விளையாட்டு: கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
- 6 Oct 2023 11:20 AM IST
ஆசிய விளையாட்டு; சாஃப்ட் டென்னிஸ் ’குரூப்- பி’ பெண்கள் ஒற்றையர் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவின் ஆத்யா திவாரியும் சீன தைபே அணியின் ஷு டிங் லோ-வும் மோதினர். இந்த போட்டியில் இந்திய அணி 1-4 என்ற செட் கணக்கில் சீன தைபேவிடம் வீழ்ந்தது.
- 6 Oct 2023 11:04 AM IST
மல்யுத்தம் ஆண்கள் 65-கிலோ எடை பிரிவு ஃப்ரீ ஸ்டைல் அரை இறுதி போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, ஈரானின் ரஹ்மான் அமுஸத்கலிலியை எதிர்த்து விளையாடினார். இதில் பஜ்ரங் புனியா 1-8 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.
- 6 Oct 2023 10:39 AM IST
மல்யுத்தம் ஆண்கள் ப்ரீ ஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா பஹ்ரைன் வீரரை 4-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- 6 Oct 2023 10:01 AM IST
ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
- 6 Oct 2023 9:26 AM IST
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு வெண்கல பதக்கம்
ஆசிய விளையாட்டு போட்டி: வில்வித்தை போட்டியில் இந்திய பெண்கள் அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது. அங்கிதா பகத், பஜன் கவுர், சிம்ரஞ்சித் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி,வியட்நாம் அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.
- 6 Oct 2023 8:40 AM IST
மல்யுத்தம் பெண்கள் ப்ரீ ஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சோனம் மாலிக் காலிறுதிக்கு முன்னேறினார்.
- 6 Oct 2023 8:31 AM IST
ஆசிய விளையாட்டு: கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்தியாவும் வங்காளதேச அணிகளும் மோதுகின்றன. இப்போட்டியில் வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 97 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- 6 Oct 2023 7:50 AM IST
கபடி போட்டி
ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான கபடி அரையிறுதி போட்டியில் இந்தியாவும் நேபாள அணிகளும் மோதின. இதில் இந்திய அணி 61-17 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு குறைந்தபட்சம் வெள்ளி பதக்கமாவது கிடைப்பது உறுதியாகியுள்ளது.













