ஆசிய ஜூனியர் கைப்பந்து: இந்திய அணி அறிவிப்பு


ஆசிய ஜூனியர் கைப்பந்து: இந்திய அணி அறிவிப்பு
x

ஆண்களுக்கான 14-வது ஆசிய ஜூனியர் கைப்பந்து போட்டி டெக்ரானில் நாளை முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது.

சென்னை:

ஆண்களுக்கான 14-வது ஆசிய ஜூனியர் கைப்பந்து (18 வயதுக்குட்பட்டோர்) சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் தலைநகர் டெக்ரானில் நாளை முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணி விவரம் வருமாறு:-

கார்த்திக் ஷர்மா (கேப்டன்), குஷ் சிங், ஷேகர் துரான், ஆதித்ய ராணா, ஆஷிஷ் ஸ்வைன், நயன்பாய் பட்டேல் துருவில், லவிகுமார், யமன் கட்டிக், அதுல் சிங், அபிஷேக், கபிலன் மகேந்திரன், ஆர்யன்.

அணியின் மேலாளர்: ஜெ.நடராஜன், தலைமை பயிற்சியாளர்: பிர் சிங் யாதவ், உதவி பயிற்சியாளர்: சைலேஷ் குமார். இந்திய அணியினர் நேற்று முன்தினம் ஈரான் புறப்பட்டு சென்றனர்.


Next Story